வீடு புகுந்து கல்லூரி மாணவரை தாக்கி செல்போன், மடிக்கணினிகள் கொள்ளை

சுந்தராபுரத்தில் வீடு புகுந்து கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை தாக்கி செல்போன், மடிக்கணினியை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-10-02 20:15 GMT


கோவை


சுந்தராபுரத்தில் வீடு புகுந்து கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை தாக்கி செல்போன், மடிக்கணினியை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


கல்லூரி மாணவர்


திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ் (வயது 19). இவர் கோவை சுந்தராபுரம் முத்துநகரில் தனது நண்பர்களுடன் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து ஓட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். இவருடன் தூத்துக்குடி மாவட்டம் முத்துநகரை சேர்ந்த ஆழ்வார் (21), தேனி போடிநாயக்கனூரை சேர்ந்த கரண் (19) ஆகியோர் தங்கி உள்ளனர். கரண் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.


இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் 3 பேரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மர்ம கும்பல் கையில், இரும்பு கம்பி, ஒயருடன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர்.


8 செல்போன் கொள்ளை


திடீரென அவர்கள் அங்கு தூங்கிக்கொண்டு இருந்த 3 பேரையும் தாக்கியதுடன் மிரட்டி அவர்களிடம் இருந்த 3 லேப்டாப்கள் (மடிக்கணினி), 8 செல்போன்களை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் திருடிச்சென்றனர். இந்த தாக்குதலில் ஆழ்வார், கல்லூரி மாணவர் கரண் ஆகியோர் காயமடைந்தனர்.


இதுகுறித்து தினேஷ் சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து 3 பேரை தாக்கி செல்போன்கள், லேப்டாப்களை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்