தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்
வத்திராயிருப்பில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
கொள்முதல் மையம்
வத்திராயிருப்பில் தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்தையா தலைமை தாங்கினார். செயலாளர் காளிதாசன் முன்னிலை வகித்தார். தென்னை விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் விஜயமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
வத்திராயிருப்பு பகுதியில் அரசு சார்பாக தேங்காய் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும். தேங்காய் கிலோவுக்கு ரூ.50 விலை நிர்ணயிக்க வேண்டும். வத்திராயிருப்பில் கொப்பரை தேங்காய் கிலோ ரூ.140-க்கு கொள்முதல் செய்ய வேண்டும்.
பயிர் காப்பீட்டு திட்டம்
தென்னையை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரராஜா, ஒன்றிய செயலாளர் மகேந்திரன், தென்னை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ராமர், ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.