கிணத்துக்கடவு அருகே செல்போன் கடைக்காரருக்கு கொலை மிரட்டல்; டிரைவர் கைது
கிணத்துக்கடவு அருகே செல்போன் கடைக்காரருக்கு கொலை மிரட்டல்; டிரைவர் கைது
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே உள்ள எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 28). இவர் கோவில் பாளையத்தில் செல்போன் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த டிரைவரான கிருஷ்ணகுமார் (40) சென்றுள்ளார். செல்போன் கடைக்கு சென்ற அவர், ராம்குமாரிடம் மது குடிப்பதற்கு 500 ரூபாய் பணம் வேண்டும், பணம் தராவிட்டால் கொலை செய்து விடுவேன் என கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து ராம்குமார் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் -இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, கிருஷ்ணகுமாரை கைது செய்தனர்.