பொக்லைன் ஆபரேட்டரை பாட்டிலால் குத்திய வாலிபர் மீது வழக்கு

பொக்லைன் ஆபரேட்டரை பாட்டிலால் குத்திய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-02-14 19:40 GMT

பெரம்பலூர் மாவட்டம், கவுல்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர்ராஜின் மகன் சிவசங்கர்(வயது 23). பொக்லைன் ஆபரேட்டர். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த தங்கராசுவின் மகன் மணிகண்டன்(26). கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் மணிகண்டனுக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று மதியம் மணிகண்டனும், சிவசங்கரும் கவுல்பாளையம் அய்யனார் கோவில் அருகே மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கவுல்பாளையம் எம்.பி.சி. காலனி பகுதியை சேர்ந்த மண்ணுமுட்டி என்ற மணிகண்டன்(23), தனக்கும் மது வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு புதுமாப்பிள்ளை மணிகண்டனும், சிவசங்கரும் மறுத்துள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தகராறில் மண்ணுமுட்டி என்ற மணிகண்டன் அங்கிருந்த காலி மதுபாட்டிலை உடைத்து சிவசங்கரின் கழுத்தில் குத்திவிட்டு தப்பிச்சென்று விட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிவசங்கரை, மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்