விவசாயியை மண் வெட்டியால் தாக்கியவர் மீது வழக்கு

விவசாயியை மண் வெட்டியால் தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-10-08 19:31 GMT

ஆதனக்கோட்டை அருகே உள்ள வளவம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 54), விவசாயி. இவருக்கும் இவரது உறவினரான பெரியய்யா (55) என்பவருக்கும் பூர்வீக சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ரவிச்சந்திரன் தனது வீட்டு அருகே உள்ள குப்பைகளை சுத்தம் செய்துகொண்டிருந்தார். அப்போது பெரியய்யாவுக்கும் ரவிச்சந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பெரியய்யா மண்வெட்டியால் ரவிச்சந்திரனின் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் குறித்து ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் ஆதனக்கோட்டை சப்-இன்ஸ்ெபக்டர் அருணகிரி வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்