பணம் மோசடி செய்த தம்பதி மீது வழக்கு
பணம் மோசடி செய்த தம்பதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
திருமங்கலம்
கள்ளிக்குடி சத்திரம் பகுதியில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியம். இவருடைய மனைவி பிரபாவதி. இவர்கள் குடியிருக்கும் பகுதியில் அவர்களுக்கு 6 சென்ட் நிலம் உள்ளதாகவும், இதனை அப்பகுதியை சேர்ந்த பாண்டிச்செல்வியை வாங்கி கொள்ளும்படி கூறி சென்ட் ரூ.60 ஆயிரம் என பேசி ரூ.1 லட்சம் முன்பணம் வாங்கினாராம். மீதி பணத்தை பெற்றுக்கொண்டு நிலத்தை பதிந்து கொடுக்கும்படி பாண்டிச்செல்வி பாலசுப்பிரமணியத்திடம் கேட்டுள்ளார். ஆனால் பாலசுப்பிரமணியம் பதிந்து கொடுக்காமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.
இதனால் சந்தேகம் அடைந்த பாண்டிச்செல்வி வில்லங்கம் போட்டு பார்த்ததில் அவருடைய பெயரில் நிலம் இல்லாமல் அவரது தந்தை பழனிச்சாமி பெயரில் நிலம் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பாலசுப்பிரமணியம், பிரபாவதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.