போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 94 பேர் மீது வழக்கு

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 94 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-05-13 20:15 GMT

விவசாயிகள் வாங்கிய கடனுக்காக அரசின் திட்டங்கள் மூலம் கொடுக்கும் பணத்தை பிடித்தம் செய்யும் வங்கியை கண்டித்து திருச்சி கண்டோன்மெண்ட் பாரதிதாசன் சாலையில் உள்ள ஒரு வங்கியை முற்றுகையிட்டு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நேற்று முன்தினம் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது விவசாயிகள் வங்கிக்கு பூட்டு போட முயன்றனர். இதையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் விவசாயிகளை கைது செய்ய முயன்றனர். அப்போது அவர்களுக்கிடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அய்யாக்கண்ணு உள்பட 94 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இது தொடர்பாக கண்டோன்மெண்ட் போலீசார் 94 விவசாயிகள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்