மாணவர்களின் விவரம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!
மாணவர்களின் விவரம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
பள்ளிக்கல்வித்துறையில் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்திருக்கும் மாணவர்களின் சுய தகவல்கள் திருடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக வெளியான ஆடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பள்ளி கல்வித்துறை சார்பில் அதிகாரி புண்ணியகோடி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் சம்பவம் குறித்து மத்திய குற்றப் பிரிவின் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பள்ளி மாணவர்களின் விவரங்களை திருடி கல்லூரிகளுக்கு விற்கும் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், பள்ளி மாணவர்களின் விவரம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ்சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்துள்ளனர். மோசடி, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.