போலீசாரை தாக்கியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு

போலீசாரை தாக்கியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-10-18 19:20 GMT

தா.பேட்டை அருகே பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி தெய்வானை உடல் நலக்குறைவால் இறந்து போனார். இவரது உடலை கொண்டு செல்லும் சாலையில் கந்தையா என்பவர் மாடுகள் கட்டுவதற்காக கீற்று படல் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெரிகிறது இதுகுறித்து ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வருவாய் துறையின் மூலமாக கீற்று படலை அகற்றி உள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சிவராமன் (39), நவநீதகிருஷ்ணன் (34) ஆகியோரை பணிசெய்ய விடாமல் தடுத்து அதே பகுதியை சேர்ந்த ஞானவேல் (33), இவரது மனைவி தேவி (29), சுந்தரவேல் (29), இவரது தாயார் லட்சுமி (52) ஆகிய 4 பேரும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி கையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் சிவராமன், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கணவன், மனைவி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்