பெண்ணிடம் ரூ.4 லட்சம் பெற்று மோசடி செய்தவர் மீது வழக்கு
பெண்ணிடம் ரூ.4 லட்சம் பெற்று மோசடி செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கரூர் புதுக்குறுக்கு பாளையம் 2-வது தெருவை சேர்ந்தவர் இளங்கோ. இவர் அதே பகுதியை சேர்ந்த சாமிநாதன் மனைவி அமுதா (வயது 49) என்பவரிடம் ரியல் எஸ்டேட் தொழிலில் பணத்தை முதலீடு செய்து, வட்டியும் முதலும் சேர்த்து அதிக லாபம் தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூ.4 லட்சம் பெற்று ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து அமுதா கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனத்திடம் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி, இளங்கோ மீது வேலாயுதம்பாளையம் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.