புதுப்பேட்டை அருகேகோவில் பூசாரியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
புதுப்பேட்டை அருகே கோவில் பூசாரியை தாக்கிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுப்பேட்டை,
புதுப்பேட்டை அருகே உள்ள சின்ன சேமக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 42). கோவில் பூசாரியான இவர் சம்பவத்தன்று அதேஊரில் உள்ள முருகன் கோவிலுக்கு பூஜை செய்ய சென்றார். அப்போது கோவிலுக்கு செல்லும் பாதையில் படுத்திருந்த அதேஊரை சேர்ந்த அபினேஷ் என்பவரை எதிர்பாராதவிதமாக நடராஜன் மிதித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அபினேஷ் நடராஜனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின்பேரில் அபினேஷ் மீது புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.