தீக்குளிக்க முயன்ற பெண் மீது வழக்கு

தீக்குளிக்க முயன்ற பெண் மீது வழக்கு

Update: 2022-10-18 18:45 GMT


ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே உள்ள புஷ்பவனம் பகுதியை சேர்ந்த ஜேசுராஜா மனைவி தினேஷ் (வயது27). இவர் நேற்றுமுன்தினம் தனது மகனுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது அவர் அதே ஊரை சேர்ந்த குழந்தை திரேஷ் என்பவர் தன்னிடம் 39 பவுன் தங்க நகைகளை வாங்கி விட்டு, பலமுறை திரும்ப கேட்டதற்கு தரமறுத்து தராததால் மனவிரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கேணிக்கரை போலீசார் தினேஷ் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்