காதலியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

காதலியை தாக்கிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-08-17 21:24 GMT

காட்டுப்புத்தூர்:

காட்டுப்புத்தூர் அருகே உள்ள நாகைநல்லூர் இளங்கோ தெருவை சேர்ந்த வையாபுரியின் மகன் சக்திவேலும்(வயது 24), சட்டக்கல்லூரி மாணவி ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதல் விவகாரம் தெரியவந்ததையடுத்து, அந்த மாணவியின் வீட்டில் அவரை கண்டித்ததால், அவர் சக்திவேலுடன் பேசாமல் இருந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், அந்த மாணவியின் வீட்டிற்கு சென்று அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காட்டுப்புத்தூர் போலீசில் அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்