ஆசிரியையை வழிமறித்து செல்போன் பறித்த ஆசிரியர் மீது வழக்கு

கடலூர் அருகே ஆசிரியையை வழிமறித்து செல்போன் பறித்த ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-12-02 18:45 GMT

கோண்டூர்,

  கடலூர் கோண்டூரை சேர்ந்தவர் சீனுவாசன் மனைவி மாலதி (வயது 36). இவர் மாளிகைமேடு அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வரும் கடலூர் பி.என்.பாளையத்தை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தணிகாசலம் (38) என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு பயிற்சியின் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் இருவரும் செல்போன் மூலம் பேசி பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் சீனுவாசன் உயிரிழந்த பிறகு, மாலதிக்கு தேவையான உதவிகளை தணிகாசலம் செய்து வந்துள்ளார்.

  இதற்கிடையே தணிகாசலத்தின் நடவடிக்கை பிடிக்காததால், அவருடன் பேசுவதை மாலதி தவிர்த்து வந்தார். சம்பவத்தன்று திருக்கண்டேஸ்வரம் அரசு பள்ளி அருகில் மாலதி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போதுஅங்கு வந்த தணிகாசலம் அவரை வழிமறித்து, மாலதியிடம் இருந்த செல்போனை பறித்து திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தணிகாசலம் மீது கடலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்