சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் மீது வழக்கு

மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் மீது வழக்கு ெதாடரப்பட்டு உள்ளது.

Update: 2023-05-05 19:35 GMT

மதுரை புதுவிளாங்குடி, கணபதி நகர், லோட்டஸ் தெருவை சேர்ந்தவர் ஜெபராஜ். இவர் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது குறித்து சிறுமி அவரது தாயிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஜெபராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்