வாலிபரை கட்டையால் தாக்கியவர் மீது வழக்கு
வாலிபரை கட்டையால் தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிக்கருப்பூர், கீரைகுடிகாடு பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 35). இவர் உதயநத்தம் கிராமத்தில் உள்ள தனது மாமா உதயகுமார் வீட்டிற்கு சென்று விட்டு தனது மற்றொரு மாமாவான உதயநத்தம் தெற்கு தெருவில் வசித்து வரும் சிவக்குமார் என்பவரது வீடு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது சிவக்குமார் தனது கையில் வைத்திருந்த கட்டையால் சத்தியமூர்த்தியை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சத்தியமூர்த்தி அளித்த புகாரின் பேரில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.