இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மீது வழக்கு
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ராஜபாளையத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இரும்பு கம்பிகள் கொண்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சி கொடிகள் ஏற்றப்பட்டு இருந்தன. அனுமதியின்றி வழி நெடுகிலும் கட்சி கொடிகளை வைத்ததாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில், வன்னியம்பட்டி ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.