ரகளையில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர் மீது வழக்கு

விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-11-03 18:45 GMT

விருத்தாசலம்

விருத்தாசலம் நகராட்சியில் துப்புரவு அலுவலராக பணிபுரிந்து வருபவர் பூபதி (வயது 48). இவர் நேற்று முன்தினம் நகராட்சி அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த துப்புரவு பணியாளரான சித்தலூர் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (37) என்பவர் பூபதி மற்றும் அலுவலகத்தில் இருந்த பணியாளர்களையும் ஆபாசமாக திட்டி பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் நகராட்சி ஆணையாளர் அறையின் கதவை காலால் எட்டி உதைத்து ரகளையில் ஈடுபட்டார். இதை தட்டிக்கேட்ட கவுன்சிலர் ஒருவரின் சட்டையையும் அவர் கிழித்ததாக கூறப்படுகிறது. உடனே அங்கிருந்த நகராட்சி பணியாளர்கள் மணிகண்டனை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பூபதி கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டன் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்