சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ராமநாதபுரம் அருகே பேராவூரை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 32). இவர் கடந்த மாதம் திருப்புல்லாணி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்தார். இதுகுறித்து சைல்டு லைன் 1098 என்ற எண்ணுக்கு புகார் வந்தது. இதையடுத்து சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் கவுரி விசாரணை நடத்தி அனைத்து மகளிர் போலீாருக்கு தெரிவித்தார். அதன்பேரில் வினோத்குமார் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.