வக்கீல் சங்க தலைவர் உள்பட 50 பேர் மீது வழக்கு

வக்கீல் சங்க தலைவர் உள்பட 50 பேர் மீது வழக்கு

Update: 2023-04-20 18:45 GMT

நாகர்கோவில்:

ஆரல்வாய்மொழி அருகே முள்ளம் பன்றியை வேட்டையாடியதாக பொய் வழக்குப்போட்டு வக்கீல்கள் சுப்பிரமணி, இளம்முருகு, பெருமாள் பிள்ளை ஆகியோரை வனஅதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும், வக்கீல்களை கைது செய்த வனத்துறையினரை கண்டித்து நேற்று முன்தினம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு நாகர்கோவில் வக்கீல் சங்க தலைவர் பால ஜனாதிபதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வக்கீல்கள் பங்கேற்றனா். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அனுமதியின்றி சாலை மறியல் போராட்டம் நடத்தியதாகவும், போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும் மறியலில் ஈடுபட்ட நாகர்கோவில் வக்கீல் சங்க தலைவர் பால ஜனாதிபதி உள்பட 50 பேர் மீது கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்