இளம்பெண்ணை துன்புறுத்திய கணவன் உள்பட 3 பேர் மீது வழக்கு
தூத்துக்குடியில் இளம்பெண்ணை துன்புறுத்திய கணவன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி அண்ணாநகர் 6-வது தெருவை சேர்ந்தவர் கிருத்திகா (வயது 27). இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், தென்காசியை சேர்ந்த காளிதாசன் (32) என்பவருக்கும் 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. காளிதாசன், மனைவியின் நகைகளை வாங்கி தோட்டம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கிருத்திகா தனது நகையை திரும்ப தருமாறு கேட்டு உள்ளார். ஆனால் காளிதாசன் மற்றும் அவரது தாய் பிரேமா, சகோதரர் வடிவேல் ஆகியோர் நகையை திருப்பி தர மறுத்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார், காளிதாசன், பிரேமா, வடிவேல் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.