வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் மீது வழக்கு
வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அன்னவாசல் அருகே வாதிரிப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் அழகுபாண்டியன் (வயது 26). இவருக்கும், மழவராயன்பட்டியை சேர்ந்த பழனி, செந்தில் ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அன்னவாசல் பெரியகுளம் அருகே வந்த அழகுபாண்டியனை, பழனி மற்றும் செந்தில் ஆகிய இருவரும் சேர்ந்து அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அழகுபாண்டியன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் பழனி, செந்தில் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.