அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள்களில் மோதி 2 பேரை பலிவாங்கிய சரக்கு வாகனம்

சிலிண்டர் ஏற்றி வந்த சரக்கு வாகனம் அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள்களில் மோதி 2 பேர் பலியானார்கள்.

Update: 2023-06-15 18:45 GMT

சாயல்குடி, 

சிலிண்டர் ஏற்றி வந்த சரக்கு வாகனம் அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள்களில் மோதி 2 பேர் பலியானார்கள்.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 60) இவர் கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். கமுதி ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவராகவும் இருந்துள்ளார். கமுதி ஒன்றியம் மொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (45). கொத்தனார். இவர்கள் இருவரும் நேற்று சாயல்குடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனித்தனியாக தங்களது ஊர்களுக்கு சென்று கொண்டிருந்தனர்.

2 பேர் சாவு

சாயல்குடி-கமுதி நெடுஞ்சாலையில் வேடகரிசல்குளம் விலக்குரோடு அருகே இவர்கள் சென்ற போது கமுதியில் இருந்து சாயல்குடி நோக்கி சிலிண்டர் ஏற்றி வந்த சரக்கு வாகனம் ஒன்றன்பின் ஒன்றாக வந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. இதில் பூமிநாதன், பழனி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது குறித்து தகவல் அறிந்ததும் சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் சல்மோன் மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 2 பேரின் உடல்களையும் கடலாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சாயல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து சிலிண்டர் ஏற்றி வந்த சரக்கு வாகன டிரைவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்