சரக்கு வேன் தடுப்புச்சுவரில் மோதி விபத்து
சரக்கு வேன் தடுப்புச்சுவரில் மோதிய விபத்தில் டிரைவர் படுகாயமடைந்தார்.;
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மர்ரி பள்ளி என்ற இடத்தில் சென்னையில் இருந்து துணிகளை ஏற்றிச் சென்ற சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகாலை நேரம் என்பதால் வேனை ஓட்டி வந்த டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்தார். இதனால் சரக்கு வேன் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சரக்கு வேனின் முன்பாகம் நசுங்கியது. இதனால் வேனை ஓட்டி வந்த டிரைவர் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக சித்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து எஸ்.ஆர்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.