நெல் ஏற்றிச் சென்ற சரக்குவேன் சாலையில் கவிழ்ந்தது; போக்குவரத்து பாதிப்பு

நெல் ஏற்றிச் சென்ற சரக்குவேன் சாலையில் கவிழ்ந்தது; போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-09 19:18 GMT

திண்டுக்கல் மாவட்டம் செந்துறையில் இருந்து சரக்கு வேன் ஒன்று நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி - நத்தம் தேசிய நெடுஞ்சாலை பிரிவு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென சரக்கு வேனின் டயர் வெடித்தது. இதனால் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் சரக்கு வேனில் இருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் சரிந்து சாலையில் சிதறியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் சாலையில் கவிழ்ந்து கிடந்த வேன் மற்றும் நெல் மூட்டைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்