துவரங்குறிச்சி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்தது
துவரங்குறிச்சி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
சென்னையில் இருந்து நெல்லையை நோக்கி வந்த கார் ஒன்று துவரங்குறிச்சியில் உள்ள வெங்கட்நாயக்கன்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, மற்றொரு கார் திரும்பியது. இதனிடையே 2 கார்களும் மோதின. இதில் சென்னையில் இருந்து நெல்லையை நோக்கி சென்ற கார் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்தவர்கள் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.