மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம்
பரிகம் ஊராட்சியில் மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம்
கச்சிராயப்பாளையம்
கச்சிராயப்பாளையம் அருகே உள்ள பரிகம் ஊராட்சியில் மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்குமார், ஒன்றியக்குழு துணை தலைவர் அன்புமணிமாறன், மாவட்ட கவுன்சிலர் அகிலாபானுஅருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரிகம் ஊராட்சி மன்ற தலைவர் சஞ்சய்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். அவர் தொடர்ந்து மண்மலை, எடுத்தவாநத்தம், செல்லம்பட்டு, கரடி சித்தூர் ஆகிய ஊராட்சிகளில் மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் மாவட்ட பிரதிநிதி சந்திரசேகர், தலைவர் தர்மலிங்கம், மண்மலை தலைவர் தென்னரசு, துணைத்தலைவர் தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.