குழந்தைகளுக்கு 'வைட்டமின் ஏ' திரவம் வழங்கும் முகாம்

வாணியம்பாடியில் குழந்தைகளுக்கு ‘வைட்டமின் ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடைபெற்றது.

Update: 2023-09-19 19:27 GMT

ஆலங்காயம் வட்டாரத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள அங்கன்வாடி மையங்களில் 'வைட்டமின் ஏ' திரவம் வழங்கும் முகாம் தொடங்கியது.வருகிற 25 ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ச.பசுபதி தலைமையில் பெருமாள்பேட்டை, கொத்தக்கோட்டை, நிம்மியம்பட்டு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது மாவட்ட தொற்றுநோயியலாளர், மாவட்ட உதவி திட்ட மேலாளர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்