செங்கல்பட்டு அருகே சாலையை கடக்க முயன்ற கன்றுக்குட்டியால் அடுத்தடுத்து 3 வாகனங்கள் விபத்தில் சிக்கியது

செங்கல்பட்டு அருகே சாலையை கடக்க முயன்ற கன்றுக்குட்டியால் அடுத்தடுத்து 3 வாகனங்கள் விபத்துக்குள்ளானது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2023-02-02 21:46 GMT

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் வையாவூரில் இருந்து சென்னை வியாசர்பாடி நோக்கி ஷேர் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. பழவேலி அருகே வந்த போது கன்றுக்குட்டி ஒன்று சாலையை கடக்க முயன்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார்.

அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் லாரி மற்றும் ஷேர் ஆட்டோ சாலையோர பள்ளத்தில் இறங்கியது. லாரியின் பின்னால் வந்த ஆம்னி பஸ் வலது புறமாக திரும்பி சாலையின் நடுவில் இருந்த மரத்தில் மோதியது.

படுகாயம்

இதில் பஸ் டிரைவர் சுந்தரபாண்டியன் வயது 54), கிளீனர் சரவணன் (39) ஆகியோர் படுகாயம் அடைந்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பஸ்சின் முன்பகுதி சேதம் அடைந்தது. சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் கிரேன் உதவியுடன பஸ்சை மீட்டு அப்புறப்படுத்தினர்.

இதனால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்