சாக்கடை கால்வாயில் விழுந்த கன்றுக்குட்டி

நத்தத்தில் சாக்கடை கால்வாயில் விழுந்த கன்றுக்குட்டியை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

Update: 2023-02-23 19:00 GMT


நத்தம்-திண்டுக்கல் சாலையில் அண்ணாநகர் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயின் மேல்புறத்தில் மூடப்பட்ட சிமெண்டு சிலாப்புகள் சேதமடைந்து பள்ளமாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் சுற்றித்திரிந்த கன்றுக்குட்டி ஒன்று எதிர்பாராதவிதமாக சாக்கடை கால்வாய்க்குள் தவறி விழுந்தது.

அந்த வழியாக ஆட்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாததால் கன்றுக்குட்டி கால்வாய்க்குள் இருப்பதை யாரும் கவனிக்கவில்லை. மேலும் கன்றுக்குட்டியும் கால்வாயைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்தது. இந்த நிலையில் நேற்று அந்த வழியாக சென்றவர்கள் கால்வாய்க்குள் கன்றுக்குட்டி தவிப்பதை பார்த்து நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள் கால்வாய்க்குள் தவித்துக்கொண்டிருந்த கன்றுக்குட்டியை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அது உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்