மனைவிக்கு சிலை வைத்து வழிபடும் தொழில் அதிபர்

சிவகாசியில் மனைவிக்கு தொழில்அதிபர் சிலை வைத்து வழிபடுகிறார்.

Update: 2023-05-25 21:26 GMT

சிவகாசி, 

சிவகாசி நேஷ்னல் காலனியை சேர்ந்தவர் நாராயணன். தொழில் அதிபர். இவருடைய மனைவி ஈசுவரி. இவர்களுக்கு 4 பிள்ளைகள். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, 8 ஆண்டுகளுக்கு முன்பு ஈசுவரி இறந்துவிட்டார். மனைவியின் இழப்பை நாராயணனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் வீடு முழுவதும் தனது மனைவியின் புகைப்படங்களை ஒட்டி பாதுகாத்து வந்தார். மனைவியின் உருவச்சிலையை வெண்கலத்தில் தயார் செய்து சிறப்பு பூஜை செய்து வந்தார்.

இதற்கிடையில் பெங்களூருவில் உள்ள ஒருவர், சிலிக்கன் மற்றும் ரப்பரை சேர்த்து மனித உருவில் தத்ருப சிலை தயார் செய்து கொடுப்பதை அறிந்து அவரை அணுகினார். தனது மனைவி ஈசுவரியின் உருவத்தை தத்ரூப சிலையாக தயார் செய்தும் தரும்படி கூறினார். இந்த சிலையை வடிவமைத்து தர ரூ.9 லட்சமும் கொடுத்தார். ஈசுவரியின் சிலை தயார் செய்யப்பட்டு, சிவகாசிக்கு கொண்டு வரப்பட்டது. ஈசுவரி நினைவு நாளின்போது சிறப்புபூஜை செய்து நாராயணன் வழிபட்டு வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்