இரும்பு பொருட்களை திருடிய சிறுவன் சிக்கினான்

இரும்பு பொருட்களை திருடிய சிறுவன் சிக்கினான்.

Update: 2023-08-22 18:45 GMT

நெய்வேலி:

நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் 2 பகுதியில் என்.எல்.சி. மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழுதான வாகனங்கள் மற்றும் இரும்பு பொருட்களை உடைக்கும் இடத்தில் கிடந்த இரும்புளை சிறுவன் ஒருவன் திருடிச் சென்றான். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த மத்திய பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று அந்த சிறுவனை மடக்கி பிடித்து மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட சிறுவனிடம் நடத்திய விசாரணையில், அவன் வட்டம் 30 பகுதியைள சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, சிறுவனை கைது செய்ததுடன், அவனிடம் இருந்த 80 கிலோ இரும்பு பொருட்களை மீட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்