சாலையில் உலா வந்த காட்டெருமை

கொடைக்கானல் நகர் பகுதியில் சாலையில் உலா வந்த காட்டெருமையை பார்த்து பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

Update: 2022-11-25 19:00 GMT

கொடைக்கானல் மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன இதில் காட்டெருமைகள் மற்றும் காட்டு பன்றிகள் அடிக்கடி நகர் பகுதியில் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதனிடையே நேற்றும் நகரின் முக்கிய பகுதியான கான்வென்ட் ரோடு, டெப்போ ஆகிய பகுதிகளில் பகல் நேரத்தில் காட்டெருமை ஒன்று உலா வந்தது. இதை பார்த்து பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். அந்த காட்டெருமை சாலையின் நடுவே தேங்கி இருந்த தண்ணீரை குடித்து தாகம் தீர்த்தது. அந்த காட்டெருமையை பொதுமக்கள் கூச்சலிட்டு விரட்டினர். அது அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. இதுபோன்று அடிக்கடி நகர் பகுதிக்குள் காட்டெருமை புகுவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்