லாரி மோதி காட்டெருமை சாவு

கோவை அருகே ஆனைகட்டி வனப்பகுதியில் லாரி மோதி காட்டெருமை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-08-27 22:45 GMT


தடாகம்


கோவை அருகே ஆனைகட்டி வனப்பகுதியில் லாரி மோதி காட்டெருமை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


வனவிலங்குகள் நடமாட்டம்


கோவை-கேரள எல்லைப்பகுதியான ஆனைகட்டியில் காட்டு யானைகள், காட்டெருமைகள், மான்கள், காட்டுபன்றிகள், உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளும் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வபோது, வனப்பகுதியில் இருந்து வெளியேறி விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.


மேலும் அவ்வபோது சாலையில் உலா வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இதுதவிர ஆங்காங்கே எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு உள்ளன.


காட்டெருமை சாவு


இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆனைகட்டி மலைப்பாதை வழியாக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து 2 காட்டெருமைகள் வெளியேறியதாக தெரிகிறது.


அப்போது எதிர்பாராத விதமாக லாரி காட்டெருமைகள் மீது மோதியது. இதில் ஒரு காட்டெருமை பரிதாபமாக இறந்தது. மற்றொரு காட்டெருமை படுகாயத்துடன் தப்பி வனப்பகுதிக்குள் சென்றது. இதற்கிடையில் டிரைவர் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச்சென்றுவிட்டார்.


இதுகுறித்து தகவல் அறிந்த தடாகம் போலீசார் மற்றும் கோவை வனச்சரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்