தேனீக்கூடுகளை சேதப்படுத்திய கரடி
கடையம் அருகே தேனீக்கூடுகளை கரடி சேதப்படுத்தியது.
கடையம்:
கடையம் அருகே வெய்க்காலிபட்டியில் டோமினிக் ராஜனுக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. அங்கு தேனீக்கூடுகளையும் வைத்து பராமரித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அங்கு வந்த கரடி, தேனீக்கூடுகளை உடைத்து சேதப்படுத்தி தேனை உறிஞ்சி சென்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தோட்டத்திற்குள் கரடி வந்து சென்ற கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.