பந்தலூரில் கரடி புகுந்தது
பந்தலூரில் கரடி புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பந்தலூர் பகுதியில் கரடி நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பந்தலூர் பஜாருக்குள் கரடி புகுந்தது. இதை கண்ட தெரு நாய்கள் கரடியை குரைத்தபடி துரத்தின. இதனால் கரடி ஓட்டம் பிடித்தது. பந்தலூர் பஜாருக்குள் கரடி புகுந்ததால், பொதுமக்கள், வியாபாரிகள் அச்சம் அடைந்து உள்ளனர். கரடியை கூண்டு வைத்து பிடித்து வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து தேவாலா வனச்சரகர் சிரஞ்சீவி, வனவர் பாலகிருஷ்ணன், வன காப்பாளர் பரமேஸ் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே ஊருக்குள் புகுந்து வரும் காட்டு யானைகளை கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் விரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.