குன்னூர் வெலிங்டனில் கடைக்குள் புகுந்து உணவுகள் தேடிய கரடி-சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

குன்னூர் வெலிங்டனில் கடைக்குள் புகுந்து உணவுகள் தேடிய கரடி- சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

Update: 2023-04-11 18:45 GMT

குன்னூர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. குன்னூர் பகுதியில் கோடை வெயில் சுட்டெரிப்பதால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. சமீப காலமாக வனப் பகுதியிலிருந்து வெளியேறும் கரடிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் பகுதியில் இரவில் கடைக்குள் புகுந்த கரடி ஒன்று உணவை தேடி உள்ளது. பின்னர் கரடி அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்றது. இதனை கடையின் முன்பு இருந்த குடியிருப்பு வாசிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் இந்த பகுதியில் கன்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்