குன்னூர் அருகே ரேஷன் கடையில் புகுந்து கரடி அட்டகாசம்

குன்னூர் அருகே ரேஷன் கடையில் புகுந்து கரடி அட்டகாசம் செய்தது.

Update: 2022-07-08 14:11 GMT

குன்னூர்

குன்னூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிக அளவு இருந்து வருகிறது. இவைகள் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து கோவில்களில் வைத்திருக்கும் எண்ணெய் மற்றும் பொருட்களை சேதப்படுத்தி சென்று விடுகின்றன.

குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் காந்திபுரம் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு பொது மக்களின் பயன்பாட்டிற்காக ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. கடையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. சம்பவத்தன்று, இரவு கரடி ஒன்று காந்திபுரம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து ரேஷன் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்தது. பின்னர் அங்கிருந்த அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களை சேதப்படுத்தி சென்று விட்டது. இதைக்கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த ஒரு வார காலமாக குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்