பங்களா வீட்டில் மதுவிருந்து விவகாரம்; விசாரிக்க 2 தனிப்படை அமைப்பு

குளச்சல் அருகே பங்களா வீட்டில் மதுவிருந்து நடந்ததா? என விசாரிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-27 21:37 GMT

குளச்சல்:

குளச்சல் அருகே பங்களா வீட்டில் மதுவிருந்து நடந்ததா? என விசாரிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

பங்களா வீட்டில்...

குளச்சல் அருகே சமீபத்தில் பங்களா வீட்டில் கல்லூரி மாணவி ஒருவர் பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்படாத மாணவியின் பள்ளிக்கூட தோழன் ஒருவர் அத்துமீறி பங்களாவுக்கு நுழைந்துள்ளார். பின்னர் பிறந்தநாள் கொண்டாடிய மாணவியை, பள்ளிக்கூட தோழன் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி விட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் பள்ளிக்கூட தோழனை தேடிவருகின்றனர். இதற்கிடையே ஒரு வீட்டில் மதுவிருந்து நடந்ததாகவும், அங்கு மாணவிகளும், மாணவர்களும் நெருக்கமாக இருந்ததாகவும் சமூகவலைதளத்தில் ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

2 தனிப்படை அமைப்பு

அதாவது அந்த ஆடியோவில் பேசும் மாணவி, பங்களா வீட்டில் நான் மது விருந்து என நினைத்து சென்றேன். ஆனால் அங்கு மதுவுடன் ஆண் நண்பர்களும் இருந்தனர். அப்போது நான் தெரியாமல் தவறு செய்து விட்டேன் என தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த குளச்சல் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையில் ஒரு தனிப்படையும், குளச்சல் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சங்கீதா அன்பு

ஜூலியட் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்