சங்ககிரி அருகே துணிகரம் பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் 9 பவுன் தங்கசங்கிலி திருட்டு வீட்டுக்கதவை உடைத்து மர்மநபர் கைவரிசை

சங்ககிரி அருகே பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் 9 பவுன் தங்க சங்கிலி திருட்டு போனது. வீட்டுக்கதவை உடைத்து மர்மநபர் கைவரிசை காட்டியுள்ளார்.

Update: 2022-12-16 20:14 GMT

சங்ககிரி,

தலைமை ஆசிரியை

சங்ககிரி அருகே தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சி மஞ்சக்கல்பட்டி கிராமம் அம்பாள்நகர் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 56). இவர், காவேரிப்பட்டி ஊராட்சி வட்டராம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய கணவர் குமரவேல் (63), மகள் சண்முகப்பிரியா (33), பேரன் லவன்அர்ஷத் (11) ஆகியோர் ஒரேவீட்டில் வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் சாந்தி தனது 9 பவுன் தாலி சங்கிலியை கழற்றி அங்கிருந்த மேஜையில் வைத்து விட்டு தூங்கியுள்ளார். நள்ளிரவில் கண்விழித்த சாந்தி, வீட்டுக்கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தங்க சங்கிலி திருட்டு

உடனே வீட்டில் உள்ள விளக்குகளை போட்டு பார்த்த போது வீட்டின் முன்பக்க அறையில் இருந்த அலமாரிகள் திறந்து கிடந்தன. அவர் மேஜை மீது வைத்திருந்த தங்க சங்கிலியை காணவில்லை.

இதுகுறித்து சாந்தி கொடுத்த புகாரின் பேரில் சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமை ஆசிரியை வீட்டு கதவை உடத்து தங்க சங்கிலியை திருடி சென்ற மர்மநபர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்