ஒருநாள் பள்ளி முதல்வராக பதவியேற்ற 5-ம் வகுப்பு மாணவி

பனைக்குளத்தில் ஒருநாள் பள்ளி முதல்வராக 5-ம் வகுப்பு மாணவி பதவியேற்றார்.

Update: 2023-09-05 19:16 GMT

பனைக்குளம்.

ராமநாதபுரம் அழகன்குளம்-பனைக்குளம் இடையே உள்ள நதிப்பால சாலையில் உள்ள நஜியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இப்பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி மு.மெத்தாபாத்திமாவின் எதிர்காலம் கனவை நிறைவேற்றும் பொருட்டு ஒருநாள் முதல்வராகும் கனவை பள்ளி நிறுவனர் ஹலிபுல்லாகான், பள்ளி தாளாளர் பவ்சுல் ஹனியா ஆகியோர் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நேற்று ஒரு நாள் முதல்வராக மாணவியை பொறுப்பேற்க வைத்தனர். இதையடுத்து பள்ளி முதல்வர் இருக்கையில் அமர்ந்த மாணவிக்கு பள்ளி முதல்வர் ராதா பாராட்டி வாழ்த்தினார். இதையடுத்து பள்ளி முதல்வர் போல பள்ளியின் ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று பார்வையிட்டார். பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் குரு லட்சுமி, உதயார், பிரியா மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் இணைந்து மாணவியை பாராட்டி வாழ்த்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்