வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
அரியலூர் சஞ்சீவிராயன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி புஷ்பலதா. இவர் கூட்டுறவு மருந்தகத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்த மர்ம மனிதர்கள், வீட்டில் இருந்த ரூ.20 ஆயிரம், ஒரு கிராம் தங்க காசு, புஷ்பலதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலி ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர். இது குறித்து அவர் அரியலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.