ஓடும் பஸ்சில் போலீஸ்காரரிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

ஓடும் பஸ்சில் போலீஸ்காரரிடம் 5 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது.

Update: 2022-11-20 21:16 GMT

முசிறி:

பஸ்சில் பயணம்

முசிறி அருகே உள்ள தொட்டியம் தோளூர்பட்டி தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் ரஞ்சித்குமார்(வயது 30). இவர் திருச்சி ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் தோளூர்பட்டியில் உள்ள தனது பெற்றோரை பார்ப்பதற்காக ரஞ்சித்குமார் திருச்சியில் இருந்து பஸ்சில் வந்தார். அந்த பஸ் முசிறி கைகாட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் வந்தபோது அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலி மாயமாகியிருந்ததை கண்டு திடுக்கிட்டார்.

சங்கிலி பறிப்பு

பஸ்சில் மர்ம நபர்கள் அவரது சங்கிலியை பறித்து சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக ரஞ்சித்குமார் முசிறி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்