போலீஸ் சூப்பிரண்டு குடியிருப்பு வளாகத்துக்குள் புகுந்த 5 அடி பாம்பு

போலீஸ் சூப்பிரண்டு குடியிருப்பு வளாகத்துக்குள் புகுந்த 5 அடி பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.

Update: 2022-12-28 16:51 GMT

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குடியிருப்பு வளாகம் வேலூர் வேலப்பாடியில் அமைந்துள்ளது. இங்கு போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் போலீஸ் சூப்பிரண்டு குடியிருப்பு வளாகத்துக்குள் சாரை பாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அதனை பிடிக்க முயன்றனர். வளாகத்தில் உள்ள தோட்டப்பகுதிக்குள் பாம்பு சென்றதால் அவர்களால் பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து வேலூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் (பொறுப்பு) தணிகைவேல் தலைமையிலான வீரர்கள் சென்று, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனுடன் சேர்ந்து சாரை பாம்பை தேடி அங்கு பதுங்கி இருந்த 5 அடி நீளமுள்ள சாரை பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை வேலூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்