லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் 5 அடி நீள கட்டுவிரியன் பாம்பு பிடிபட்டது

லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் 5 அடி நீள கட்டுவிரியன் பாம்பு பிடிபட்டது.

Update: 2023-05-20 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் கிழக்கு வி.ஜி.பி. நகரில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் கீழ் படிக்கட்டு பகுதியில் நேற்று காலை சுமார் 5 அடி நீளமுடைய கட்டுவிரியன் பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது. இதைப்பார்த்ததும் அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் பொதுமக்கள் உடனே இதுபற்றி விழுப்புரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து சென்று அந்த பாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்