புதுப்பேட்டையில் 2 மாத குழந்தை திடீர் சாவு

புதுப்பேட்டையில் 2 மாத குழந்தை திடீர் உயிரிழந்தது.

Update: 2022-12-25 18:45 GMT

புதுப்பேட்டை, 

பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை பக்கிரிப்பாளையம் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 45). இவர் பண்ருட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி புஷ்பலட்சுமி. இவர்களுக்கு யோகமித்ரன் என்ற 2 மாத குழந்தை இருந்தது. சம்பவத்தன்று புஷ்பலட்சுமி தனது குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டி உள்ளார். அப்போது அந்த குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த குழந்தையை சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு யோகமித்ரனை பரிசோதித்த டாக்டர், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்