12 அடி உயர சுதந்திர விநாயகர் சிலை பிரதிஷ்டை
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கும்பகோணத்தில் 12 அடி உயர சுதந்திர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
முன்னதாக அந்த சிலைகளுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் அன்பழகன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சரவணன், இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் பாலா, மாவட்ட தலைவர் ரவி, நகரத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவிடைமருதூர்
இதேபோல கும்பகோணத்தை அடுத்துள்ள திருவிடைமருதூர் வட்டாரத்தில் 98 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது என முடிவு செய்யப்பட்டு பூம்புகாரில் இருந்து 5 அடி முதல் 9 அடி வரை உயரத்தில் பல வண்ணங்களில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் லாரி, வேன் போன்ற வாகனங்களில் ஏற்றி வந்து அப்பகுதி இந்து முன்னணி அமைப்பினரிடம் ஒப்படைத்தனர். அமாவாசை தினமான நேற்று பெரும்பாலான இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யப்பட்டன. அடுத்த மாதம்(செப்டம்பர்) 1-ந் தேதி விநாயகர் விஜர்சன ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளனர். மேற்கண்ட தகவலை இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் பாலா தெரிவித்தார்.