12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
நாட்டறம்பள்ளி அருகே தோட்டத்தில் பதுங்கியிருந்த 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்தவர் இக்பால். இவருக்கு சொந்தமான மாந்தோப்பு திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே பையனப்பள்ளி பகுதியில் உள்ளது. இந்த மாந்தோப்பில் தொழிலாளர்கள், கிழே விழந்த மாங்காய்களை சேகரித்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மலைப்பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அருகில் உள்ள காட்டில் பத்திரமாக விட்டனர்.