101 வயது மூதாட்டியிடம் 8 பவுன் நகை திருட்டு
செங்கம் அருகே 101 வயது மூதாட்டியிடம் 8 பவுன் நகையை திருடி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கம்
செங்கம் அருகே 101 வயது மூதாட்டியிடம் 8 பவுன் நகையை திருடி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
101 வயது மூதாட்டி
செங்கம் அருகே உள்ள கரியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் பகுதியில் வசித்து வருபவர் பச்சையம்மாள் (வயது 101). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
சம்பவத்தன்று பெண் ஒருவர் பச்சையம்மாள் தனியாக வசித்து வருவதை நோட்டமிட்டு அவரது வீட்டிற்கு வந்து அவரிடம் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
8 பவுன் நகை திருட்டு
அப்போது பச்சையம்மாள் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலி மற்றும் 3 பவுன் வளையல் என 8 பவுன் நகைகளை அந்த பெண் மூதாட்டியை ஏமாற்றி திருடி சென்றுள்ளார்.
இதுகுறித்து பச்சையம்மாள் வீட்டின் அருகில் உள்ள உறவினர்கள் உதவியுடன் செங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் நகையை திருடி சென்ற பெண் யார் என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் விசாரணையில் அந்த பெண் தள்ளப்பாடி பகுதியை சேர்ந்தவர் என்றும், தொடர்ந்து வீட்டில் தனியாக இருக்கும் நபர்களிடம் உறவினர் என அறிமுகம் செய்து கொண்டு கைவரிசை காட்டியவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
அவரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.