திருச்சி விமான நிலையத்தில் ரூ.97.71 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.97.71 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-03-11 19:37 GMT

திருச்சி விமான நிலையத்தில் ரூ.97.71 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்களில் குருவிகளாக வருபவர்கள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஆண் பயணி ஒருவர் மடிக்கணினியில் 494 கிராம் எடையுள்ள தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல்

இதேபோல் விமான நிலைய கழிவறையில் 3 தங்க சங்கிலி, ஒரு தங்க கட்டி என 1 கிலோ 266 கிராம் தங்கம் கிடந்தது. இதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 1 கிலோ 760 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.97 லட்சத்து 71 ஆயிரத்து 520 ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்